அபிராமி அந்தாதி 20
உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே.
எங்கும்....
பல்லவி
எங்கும் பூரணமாய் நிலையாய் நிற்கும்
மங்கலச்செல்வியே கேசவன் சோதரி
அனுபல்லவி
தங்கும் நின் திருக்கோயிலுன் நேசன்
சங்கரனார் பங்கிலோ நான் மறையின் அடிமுடியோ
சரணம்
பங்கயமோ அல்லது அமுதம் பொழிந்திடும்
திங்களோ அன்றி திருப்பாற்கடலோ
அடியேன் நெஞ்சகமோ வியந்தேன் அன்னையே
தஞ்சம் உனது அரவிந்த மலர்ப் பதமே.
No comments:
Post a Comment