அபிராமி அந்தாதி 34
வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.
வந்துனைச் சரணடைந்த......
பல்லவி
வந்துனைச் சரணடைந்த அடியார்க்கெல்லாம்
நீ தங்குமிடமும் வானகமும் தருபவளே
அனுபல்லவி
சுந்தரியே தாயே கேசவன் சோதரியே
அந்தமுமாதியுமான மகேச்வரியே
சரணம்
இந்தினிளம்பிறை சூடிய சிவனிடமும்
சந்திர சூரியனில் செந்தாமரை மலரில்
பைந்தேன் துளபமும் மணிமாலையுமணிந்த
செந்தாமரைக்கண்ணன் மார்பிலுமிருப்பவளே
No comments:
Post a Comment