பாடிப் பாடி......
பல்லவி
பாடிப் பாடி நான் சலித்தேன் ராமா
நாடி உன் பாதமே கதியென்று தினமும்
அனுபல்லவி
ஓடி ஓடி இந்த உலகில் எங்கும்
தேடித் தேடி அலைந்தேன் உன்னையே
பல்லவி
வேடிக்கையாய் பல தவறுகள் புரிந்தேன்
வாடி மனம் வருந்தி திருந்தி உனைத் துதித்தேன்
ஈடிணையில்லா கலியுகத் தெய்வமே
மோடி செய்யாமல் எனைக் காத்தருள்வாய்
No comments:
Post a Comment