அபிராமி அந்தாதி 9
கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.
கரு நிறம் கொண்டு......
பல்லவி
கரு நிறம் கொண்டு எந்தை சிவபெருமான் கண்ணில்
உருவாகி நின்ற கேசவன் சோதரி
அனுபல்லவி
பெருத்து நிற்கும் பொன்மலையொத்த முலையில்
வருந்தியழும் பிள்ளைக்குப் பாலூட்டிய அன்னையே
சரணம்
பொருந்திய மாலையும் கரங்களில் வில்லம்பும்
சிறு மொட்டு மலர்வது போலுன் புன்னகையும்
திருத்தன பாரமும் கொண்டு அருளுடன் நிற்கும்
திருவே என் முன் வந்து காட்சி தருவாயே
No comments:
Post a Comment