அபிராமி அந்தாதி 93
நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.
உலகெலாம்.....
பல்லவி
உலகெலாம் படைத்தவளே கேசவன் சோதரி
அலகிலா விளையாடல் செய்திடும் அன்னையே
அனுபல்லவி
நிலையிலா உலகில் நிலையாயிருப்பவளே
விலையிலா உனையே அறிவதும் அரிதே
சரணம்
முலை தாமரை மொட்டென்றுமுன்னை
மலையரசன் மகளென்றும் மான் விழிகளென்றும்
பலரும் பலவிதமாக வர்ணனை செய்துனை
நலம் பெற வேண்டுவது நகைப்பிற்குரியதே
No comments:
Post a Comment