அபிராமி அந்தாதி 96
கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால்
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே.
அழகிய தாமரைதனில்......
பல்லவி
அழகிய தாமரைதனில் கோயில் கொண்ட
கோமளவல்லியைக் கேசவன் சோதரியை
அனுபல்லவி
எழுதுதற்கரிய ஓவியமெனத்திகழும்
எழில் மிகு மேனியளை கருநிறத்தவளை
சரணம்
பழுதொன்றுமிலாத யாமளவல்லியை
சகலகலையறிந்த மயில் போன்றவளை
இயன்றவரை துதிக்குமடியார் பெறுவர்
ஏழுலகாளும் அதிபரெனும் பதவி
No comments:
Post a Comment