அறம் தழைக்கும்.......
பல்லவி
அறம் தழைக்கும் ஶ்ரீமுஷ்ணம் தனிலெழுந்தருளிய
இறைவன் பூவராகன் மலர்ப்பதம் பணிந்தேன்
அனுபல்லவி
பிறவிப் பெருங்கடல் கடந்திட வேண்டி
கருணாமூர்த்தி அருமாகடலமுதன்
சரணம்
ஒருநாளும் உந்தன் திருநாமம் துதித்திலேன்
உன் கோயில் திருவாயில் மிதித்திலேன்
கருணை மிகு உனதிரு திருவடி நினைத்திலேன்
விரும்பி மனம் திருந்திக் கேசவனே உனதருளால்
இராகம் : நாட்டக் குறிஞ்சி தாளம் : மிச்ர துருவம்
No comments:
Post a Comment