எனக்கோரு ......
பல்லவி
எனக்கொரு குறையுமில்லை கேசவா
உனதிரு விழிகளின் அருட்பார்வையே போதும்
அனுபல்லவி
தனக்குவமை இல்லாத தனிப்பெருந்தெய்வமே
உனதருளொன்றே என்றும் வேண்டினேன்
சரணம்
அனல் புனல் காற்று ஆகாயம் பூமி
அனைத்தும் நீயே அகில லோகநாயகா
கனகாங்கி செங்கமலம் கரம் பிடித்தவனே
வனமாலையணிந்தவனே ஶ்ரீ வாசுதேவனே
No comments:
Post a Comment