உன்னைவிட........
பல்லவி
உன்னைவிட உயர்ந்தவர் யார் பாண்டுரங்க விட்டலா
அன்னை தந்தை குரு அனைத்தும் நீயே
அனுபல்லவி
முன்னைக்கு முன்னவனே தேவருக்கு மூத்தவனே
தன்னைத் தான்றிந்தவர்க்கு முக்தியளிப்பவனே
சரணம்
இன்னிசையுடன் நாம சங்கீர்த்தனம் செய்தால்
நன்னெறி காட்டி ஞானமளிப்பவனே
புன்னகை முகத்தோனே இன்னருள் தருபவனே
பன்னக சயனனே சென்ன கேசவனே
No comments:
Post a Comment