அபிராமி அந்தாதி 100
குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!
அணிந்திருக்கும்......
பல்லவி
அணிந்திருக்கும் கொன்றை மலர் மாலைகள் தழுவிடும்
மணம் தரும் திருமுலையும் காதணியுமுடையவளே
அனுபல்லவி
இணையத் துணை செய்யும் மலர்க் கணைகளைந்துடன்
கரும்பு வில்லேந்தும் கேசவன் சோதரி
சரணம்
அணைக்கும் வண்ணம் அழகிய கழையெனத்
திகழும் திருநெடுந்தோளும் மருண்ட
மான் விழியும் வெண்முத்து நகையும் கொண்ட
உனதுருவே என் நெஞ்சில் நீங்காதிருக்கிறதே
No comments:
Post a Comment