வரம் தரும்.....
பல்லவி
வரம் தரும் லக்ஷ்மி வரலக்ஷ்மி உன்னை
கரம் பணிந்து நான் வரவேற்றேன்
துரிதம்
வருக வருக இன்னருள். தருக தருக
வருக வருக நலம் யாவும் தருக தருகவென
அனுபல்லவி
நரர்சுரர் நாரதர் அனைவரும் போற்றும்
கேசவன் மார்பினில் வீற்றிருப்பவளே
துரிதம்
வருக வருக இன்னருள். தருக தருக
வருக வருக நலம் யாவும் தருக தருகவென
சரணம்
பரம் பொருள் நீயே பராசக்தியும் நீயே
ஆடி வெள்ளியில் அவதரிப்பாயே
எட்டு விதமான செல்வம் அளித்திடும்
அஷ்ட லக்ஷ்மி அன்னையே அருள்புரிவாயே
துரிதம்
வருக வருக இன்னருள். தருக தருக
வருக வருக நலம் யாவும் தருக தருகவென
இராகம் : மத்யமாவதி தாளம் : கண்ட ஏகம்
No comments:
Post a Comment