மகாதேவன்.......
பல்லவி
மகாதேவன் மைந்தனே விநாயகனே உந்தன் மலர்ப் பதம் பணிந்தேன்
அகார உகார மகாரமென்னும் மந்திரப்பொருளின் வடிவானவனே
அனுபல்லவி
சுகானுபவம் தரும் சங்கீதரசிகனே சுமுகே அய்ங்கரனே
விகாரமில்லா மனத்தடன் துதித்தேன் வினைகள் தீர்த்தருள்வாய்
சரணம்
மகானுபாவனே வேழமுகத்தோனே சிகாமணியே உந்தன்
முகாரவிந்தம் கண்டு மகிழ்நதேன் மூலப்பொருளே அருளே சுடரே
தகாதவனோ நான் உன்னருளைப் பெறவே உமாசுதனே கணநாயகனே
புகலென உனையே சரண்டைந்தேனே கேசவன் மருகனே
No comments:
Post a Comment