என்றும்.......
பல்லவி
என்றும் கேசவனுன் கழலடி நிழலில்
நின்று சேவிக்கும் நிலையே வேண்டினேன்
அனுபல்லவி
இன்றும் கருடனும் அனந்தனும் உனது
அருகிலிருந்து சேவை புரிவது போல்
சரணம்
கன்றின் குரல் கேட்ட பசுவா௧ அன்று
சென்று துருவனுக்கருள் செய்தவனே
வென்று தசமுகனின் பகை முடித்தவனே
குன்றினைக் குடையாக்கி குவலயம் காத்தவனே
No comments:
Post a Comment