என்றும் .........
பல்லவி
என்றும் எந்தன் துணை நீயே கேசவா
இன்றே விரைந்தெனை ஆட்கொள்ள வா
அனுபல்லவி
குன்றேந்தி நின்றவனே கோகுலபாலனே
உன்றன் திருவடியே அன்றாடம் துதித்தேன்
சரணம்
நின்று திருமலையில் பக்தருக்கு காட்சி தரும்
மன்னும் புகழுடைய திருவேங்கடமுடையானே
வென்று பகை முடித்து தசமுகனைக் கொன்று
அன்றோர் அரக்கனுக்கு அபயமளித்தவனே
No comments:
Post a Comment