அபிராமி அந்தாதி 94
விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.
அன்னை அபிராமியே.....
பல்லவி
அன்னை அபிராமியே கேசவன் சோதரி
உன்னைப் பணிந்திடும் சமயமும் நன்றே
அனுபல்லவி
உன்னை விரும்பியுன் மெய்யடியார்கள்
பின் சொன்ன வண்ணம் உன்னையே பணிந்திடின்
சரணம்
தன்னை மறந்து கண்களில் நீர் பெருக
உன்னையே நினைந்து மொழி தடுமாறி
ஆனந்தமாகி அறிவை இழந்து
தேனுண்ட வண்டு போல் பித்தராய் திரிந்திடில்
No comments:
Post a Comment