அபிராமி அந்தாதி 99
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே
ஒயிலாக......
பல்லவி
ஒயிலாக குழையணிந்த கேசவன் சோதரி
கயிலைநாதனைக் கரம் பிடித்த மலைமகளே
அனுபல்லவி
மயிலாக இமயம் தனில் வலம் வரும் அழகியே
வெயிலாக க்கதிரொளியாய் விண்ணில் இருப்பவளே
சரணம்
குயிலாக க் கடம்பவனம் தன்னில் திரிபவளாய்
பைய நடந்து வரும் அன்னப் பறவையாய்
தையலே தமரை மலர் மீதமர்ந்தவளாய்
மெய்யடியார் மனங்களில் இவ்வண்ணம் காட்சி தரும்
No comments:
Post a Comment