அங்கயற்கண்ணியுன்.......
பல்லவி
அங்கயற்கண்ணியுன் பங்கய பதம் பணிந்தேன்
எங்கள் குலம் தழைக்க மங்களம் தந்தருள்
அனுபல்லவி
சங்கரன் சோமசுந்தரேச்வரன்
பங்கிலுறைபவளே மீனலோசனி
சரணம்
சங்கத் தமிழ் வளர்த்த கூடல் மாநகரில்
பொங்கும் எழிலுடனே எழுந்தருளிக் காட்சி தரும்
சங்கரி கௌரி கேசவன் சோதரி
எங்கும் நிறைந்திருக்கும் திரிபுரசுந்தரி
No comments:
Post a Comment