கோவிந்தா.......
பல்லவி
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்றே
கூவியழைத்தேனே செவியில் விழவில்லையா
அனுபல்லவி
தேவன் கேசவன் மணிமார்பில் வீற்றிருக்கும்
தேவி நீயேனும் எந்தன் குறை கேளாய்
சரணம்
முந்தைய பழவினையில் மூழ்கிக் கிடந்தேன்
விந்தை உலகில் வீணில் சுற்றித் திரிந்தேன்
எந்தையே அனைத்தும் நீயென்றறிந்தபின்
உன் தயை வேண்டி உன் பதம் பணிந்து
இராகம் : அம்ருதவர்ஷிணி தாளம்: மிச்ர ரூபகம்
No comments:
Post a Comment