அபிராமி அந்தாதி 97
ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.
எண்ணிலாப் புண்ணியர்......
பல்லவி
எண்ணிலாப் புண்ணியரனைவரும் துதித்திடும்
கண் மூன்றுடையவளே கேசவன் சோதரி
அனுபல்லவி
தண்மதி, சூரியன், அக்கினி, குபேரன்,
விண்ணுலகாளும் இந்திரன், மற்றும்
சரணம்
அம்புய மலரமர் பிரமனும், முரனை
அழித்த திருமாலும்,புரமெரித்த சிவனும்,
கும்பமுனி அகத்தியரும், கணபதியும், காமனும்,
படை நடத்தும் கந்தனுமடியார் பலருமென
No comments:
Post a Comment