துதித்தேன்......
பல்லவி
துதித்தேன் அன்னையே உன்னையே ஶ்ரீ சாமுண்டீச்வரி
அனுபல்லவி
உதிக்கும் கதிரவன் மதியோன் நரர்சுரர் முனிவர்கள்
மதித்திடும் ஈச்வரி சங்கரி கேசவன் சோதரி
சரணம்
எதிர்த்திடும் அரக்கரை வதைத்திடும் பயங்கரி காளி
ரதிபதி மயங்கிடும் அதிசயமான வடிவினள் பைரவி
விதியையும் மாற்றும் வல்லமை படைத்தவள் ஆதிபராசக்தி
எதிலும் எங்கும் நிறைந்தவள் விச்வேசவரி ஈசப்ரியசகி
இராகம் : லலிதா தாளம் : சதுரஸ்ர அடை
No comments:
Post a Comment