பாண்டுரங்கன் நீயே........
பல்லவி
பாண்டுரங்கன் நீயே எனைக் கைவிட்டால்
மீண்டும் எவரிடம் நான் முறையிடுவேன்
அனுபல்லவி
பாண்டவதூதனே பாடகத்தோனே
ஆண்டவன் உனையன்றி இவ்வுலகில் வேறறியேன்
சரணம்
மூண்டெழுந்த பாரதப் போரில் தேர் நடத்தி
காண்டீபன் பார்த்தனுக்குத் துணை நின்ற கேசவா
தீண்டும் பாம்பின் மேல் பள்ளிகொண்டிருக்கும்
திருவுறை மார்பனே நாராயணனே
No comments:
Post a Comment