ஆராவமுதனே ஆணிமுத்தே......
பல்லவி
. ஆராவமுதனே ஆணிமுத்தே அருந்தேனே
தீராவினை தீர்க்கும் திருக்குடந்தை சாரங்கனே
அனுபல்லவி
காரார் குழலாள் கோமளவல்லி துதிக்கும்
தீர சங்கராபரண ராகப்ரியன.
சரணம்
இருள் சூழ்வனம் போலென் வாழ்வு அதில் நன்
நெறிசெலா விலங்குகள் ஐம்புலன்கள்
திருவுள்ளம் கனிந்திதைச் சரி செய்து என்னைக்
காத்திட வேண்டியே கேசவனுனைப் பணிந்தேன்
இராகம் : சங்கராபரணம் தாளம் : கண்ட ஜம்பை
No comments:
Post a Comment