மத்தூர் அரசியே........
பல்லவி
மத்தூர் அரசியே மகிஷாசுரமர்த்தினி
பக்தரைக் காக்கும் பர்வதவர்த்தினி
அனுபல்லவி
சித்தர்கள் துதித்திடும் சக்தியின் வடிவே
முத்தொழில் புரிந்திடும் மூவர்க்கும் முதலே
சரணம்
எண்கரங்களில் ஆயுதம் ஏந்தியும்
கண்களில் சாந்தமும் கருணையும் பொழிந்திடும்
தன்னிகரில்லாத தத்துவப் பொருளே
விண்ணவர் போற்றும் கேசவன் சோதரி
இராகம் : ஆபோகி தாளம்: திச்ர ரூபகம்
No comments:
Post a Comment