அபிராமி அந்தாதி 95
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.
மலையரசன்.....
பல்லவி
மலையரசன் பெற்ற மாதவமே
மலைமகளே தாயே கேசவன் சோதரியே
அனுபல்லவி
அலைகடலென நிறைந்த அருட்கடலே
நிலவின் கலையணிந்த அழியாத குணக்குன்றே
சரணம்
நல்லது வந்தாலும் தீயது விளைந்தாலும்
அல்லல் எனக்கில்லை என்றே அனைத்தையும்
அன்றே உனக்கென அளித்த பின்னாலே
இன்றுன் பதமே கதியெனப் பணிந்தேன்
No comments:
Post a Comment