ஏகாம்ப்ரேச்வரனை.......
பல்லவி
ஏகாம்ப்ரேச்வரனை சிவனை ஆராதனை புரிந்தேன்
திரு நிலாத்திங்கள் துண்டத்தான் பணிந்த - ஶ்ரீ
அனுபல்லவி
ஶ்ரீ காஞ்சி நகரில் நிலமெனத் திகழும் பரமனைக்
காமகோடி காமாக்ஷி தேவியும் துதிக்கும்
சரணம்
நிலம் நீர் நெருப்பு நீள் விசும்பு காற்று ஆகிய
இயற்கையின் வடிவம் அனைத்தும் அவனே
இறப்பும் பிறப்பும் இல்லாதிருக்க அடியவன்பணியும்
கலியுகம் போற்றும் கேசவன் நேசன்
இராகம் : சங்கராபரணம் தாளம் : சங்கீர்ண மட்யம்
No comments:
Post a Comment