அபிராமி அந்தாதி 98
தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரந்தது எங்கே?
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.
மெய்யுரைக்குமடியார்கள்......
பல்லவி
மெய்யுரைக்குமடியார்கள் நெஞ்சகத்தில் அல்லாமல்
பொய்யுரைப்பார் நெஞ்சம்தனை நாடாத பூங்குயிலே
சமஷ்டி சரணம்
பைய வந்துன் பாத த்தாமரையை தன் தலையில்
ஒய்யாரமாய்ச் சூடிய நமச்சிவயானுக்கு
கையிலுள்ள தீயும் தலையில் வைத்த ஆறும்
காணாமல் போனதென்ன ,கேசவன் சோதரி!
No comments:
Post a Comment