பத்மநாபா......
பல்லவி
பத்மநாபா பரிந்தருள் புரிவாய்
உத்தமனே உன் திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
சத்தியமூர்த்தி மெய்யப்பனே உனை
முத்திதனைப் பெறவே போற்றித் துதித்தேன்
சரணம்
நித்தியமில்லா உலக வாழ்வில்
பித்தனாய்ப் பேதையாயலைந்து திரிந்தேன்
நித்தியம் நீயென அறிந்து தெளிந்தேன்
அத்திகிரி வரதா எனையாட்கொள்வாய்
No comments:
Post a Comment