பண்டரீபுரத்தானை.....
பல்லவி
பண்டரிபுரத்தானைப் பாண்டுரங்கவிட்டலனை
கண்டு கலி தீர்ப்போம் கவலைகள் மறப்போம்
அனுபல்லவி
அண்ட சராசரங்களனைத்தையும் படைத்து
காத்து நிலை நிறுத்தி ஆண்டிடும் கேசவனை
சரணம்
சண்டாள உலகில் பொருள் புகழ் போகமெனத்
திண்டாடித் தேடி அலைந்து திரியாமல்
உண்டு களித்து வீணாய்ப் போகமலவன்
தொண்டருக்குத் தொண்டு செய்து அவனருள் பெறுவோம்
No comments:
Post a Comment