உலகெலாம்......
பல்லவி
உலகெலாம் படைத்த அன்னையே நாகாத்தம்மா
எங்கள் எல்லையில் வந்தமர்ந்த தாயே
அனுபல்லவி
உலகுயிரனைத்தும் ஈன்ற லோகநாயகி
நலம் பல நல்கிடும் கேசவன் சோதரி
சரணம்
பலகாலம் பழவினையால் உனை மறந்தேன்
மனம் போன போக்கெல்லாம் சுற்றித் திரிந்தேன்
என்றாலும் இன்றுந்தன் தாள் பணிந்தேன்
அடிமையெனக்கிறங்கி ஆட்கொள்ள வேண்டும்
இராகம்: நாதநாமக்ரியா தாளம்: கண்ட அடை
No comments:
Post a Comment