கற்பகவல்லி......
பல்லவி
கற்பகவல்லி நின் பொற்பதம் தனையே
அனுதினம் சரணடைந்தேன் — ஶ்ரீ
அனுபல்லவி
சிற்பரன் சதுரங்கவல்லப நாதனும்
சாமுண்டி தேவியும் உடனிருந்து போற்றும்
சரணம்
கற்சிலையென்றும் கற்பனையென்றும்
சொற்களாலேசும் அற்பர்கள் தமக்கும்
நற்பலன் நல்கிடும் தற்பரையே பூவனூர்
அற்புதமே சென்ன கேசவன் சோதரி
இராகம் : வேதாந்த கமனா தாளம் : ஆதி
No comments:
Post a Comment