ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே.
தோழன்மார் முதலானவர்களும் ஒருவருமில்லை.
ஊரென்றும் உறவென்றும்.......
பல்லவி
ஊரென்றுமுறவென்றும் எனக்கொருவரில்லை
பாரினிலுன் பாதமே துணையென்று துதித்தேன்
அனுபல்லவி
வேறொரு துணையென்று எதுவும் எனக்கில்லை
உற்றமும் சுற்றமும் உனையன்றி வேறில்லை
சரணம்
தீரா வினப்பயனால் கட்டுண்டு திரிந்தேன்
சேரா இடம் சேர்ந்து துன்பங்கள் பெற்றேன்
காரொளி வண்ணனே கண்ணனே கேசவனே
ஆருளார் எனைக்காக்க அரங்கமா நகருளானே
No comments:
Post a Comment