ஓங்காரவடிவினனே.....
பல்லவி
ஓங்காரவடிவினனே வேழமுகத்தோனே
தீங்கின்றி எனக்கருள வேண்டுமென தினம் துதித்தேன்
அனுபல்லவி
தேங்காய் பழம் புஷ்பம் அருகம்பில் கொண்டு
பாங்குடனே திருவடியில் அர்ச்சனை புரிந்தேன்
சரணம்
மாங்கனியை வென்று ஈன்றோரே அகிலமென
ஓங்கி அனைவருக்கும் ஓதிய அய்ங்கரனே
தூங்காமல் தூங்கும் கேசவன் மருகனே
நீங்காத புகழ் மேவும் மணித்வீப கணபதியே
No comments:
Post a Comment