வயலாளி மணவாளன்....
பல்லவி
வயலாளி மணவாளன் மலர்ப்பாதம் துதித்தேன்
மங்கையாழ்வார் துதித்த சிந்தனைக்கினியான்
அனுபல்லவி
அயனரனும் நாரதரும் சனகாதிமுனிவருடன்
கயல்விழியாள் அமிர்தவல்லி மனம் மகிழ்ந்து போற்றும்
சரணம்
வேடனாய் வந்து வேதராஜபுரம் தனிலே
வழிப்பறி செய்த ஆழ்வாரையாட்கொண்ட
வைகுந்தவாசன் கல்யாண ரங்கனாதன்
திருவாலி நகர் வளரும் மாதவன் கேசவன்
No comments:
Post a Comment