மாதவனே.....
பல்லவி
மாதவனே உந்தன் மலரடி பணிந்தேன்
வேதனை வினை யாவும் தீர்த்தருள வேண்டுமென
அனுபல்லவி
ஆதவ குலத்துதித்த கோதண்டராமனே
நாதன் உனையன்றி நானிலத்தில் யாருளார்
சரணம்
மாதவம் ஏதும் செய்ததுமில்லை
வேதங்கள் மந்திரங்கள் அறிந்தவனில்லை
யாதவனே கேசவா உன் திருநாமமே
ஓதியே அனுதினம் பாடித் துதித்து
No comments:
Post a Comment