காணும் தோறும்.....
பல்லவி
காணும் தோறும் களிப்புறச் செய்திடும்
வேணுகோபாலன் திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
பேணுமடியார் வினைகளைத் தீர்த்திடும்
தனக்குவமையில்லாத தீனசரண்யன்
சரணம்
கீத வாத்திய சங்கீத ரசிகன்
கீதையை ஓதிய கண்ணன் கேசவன்
வேதங்கள் போற்றும் மாலன் மதுசூதனன்
யாதவ குல திலகன் நந்தகுமாரன்
No comments:
Post a Comment