கேசவா வா.......
பல்லவி
கேசவா வா எந்தன் வினை தீர்க்கவா
நேசமுடன் பணிந்தேன் மாதவா வா
அனுபல்லவி
ஈசன் மகேசன் நேசனே வா
நீசன் கம்சனை அழித்தவா வா
சரணம்
பாசத் தளைகளைக் களைந்திட வா
வாச மலர் மாலைகள் சூடியவா வா
மாசிலாமணியே வா முரளீதரா வா
பேசும் தெய்வமே வா வேங்கடவா வா
இராகம்: சலநாட்டை மட்யதாளம் (சது)
No comments:
Post a Comment