மகிஷாசுரமர்த்தினி ......
பல்லவி
மகிஷாசுரமர்த்தினி மலர்த்ததாள் பணிந்தேன் மகிதலம் போற்றும்
மாகாளி கௌரி ஈச்வரி சகுண நிற்குண ஸ்வரூபிணி - ஶ்ரீ
சமஷ்டி சரணம்
மகிடன் தலை கொய்து சினம் தணிந்து மத்தூர் தலம் தனில்
எழுந்தருளி அகில உலகையும் காக்கும் அன்னையே
அன்பர்கள் இன்புற அருள் தரும் துர்கையே புகலிடம்
நீயெனத் தஞ்சம் புகுந்தேன் ஆதரித்தருள்வாய் கேசவன் சோதரி
இராகம் : ஹிந்தோளம் தாளம் : சங்கீர்ண துருவம்
No comments:
Post a Comment