அழகிய நம்பியின்.......
பல்லவி
அழகிய நம்பியின் கழலடி பணிந்தேன்
அழகியவல்லி உடனிருந்து போற்றும் ( வடிவழகிய..)
அனுபல்லவி
சுழலும் சக்கரக் கையனவன் புகழை
பழகு தமிழ் மொழியில் பாடிப் பரவசித்து
சரணம்
அழலேந்தும் நெற்றிக்கண்ணனும் பிரமனும்
அமரேந்திரனும் நரர் சுரரும் நாரதரும்
மண்டூக முனிவரும் வால்மீகியும் பணியும்
அழகன் கேசவன் அவனருள் வேண்டி
No comments:
Post a Comment