உன்னருளாலே…..
பல்லவி
உன்னருளாலே உன்னைத்துதிக்கும்
இன்னருளொன்றே வேண்டினேன் சிவனே
அனுபல்லவி
பன்னகசயனன் கேசவன் நேசனே
பன்னகாபரணனே கையிலாய வாசனே
சரணம்
கன்னலே தேனே காமனை எரித்தவனே
முன்னைப் பழம் பொருளே மூவருக்கும் முதல்வனே
அன்னமயமானவனே பொன்னம்பலவாணனே
தென்னாடுடைய சிவபெருமானே
No comments:
Post a Comment