நித்தமொரு ……
..
பல்லவி
நித்தமொரு புதுப்பாடலுனைப் போற்றி நான் பாட
சித்தம் இரங்கியருள் திருமாலே கேசவனே
அனுபல்லவி
அத்தனையும் சொற்சுவை பொருட்சுவை கலந்து
வித்தகர் போற்றும் வண்ணம் எதுகை மோனையுடன்
சரணம்
இத்தரை மாந்தருக்கு ஒரு கோவில் போதாதென
அத்தனை ஊர்களிலும் எழுந்தருளிக் காட்சி தரும்
உத்தமனே உயர் சத்தியகிரி நாதா
கத்தும் கடல் நடுவே பள்ளிகொண்ட பெருமாளே
துரிதம்
அத்தன் பிரமனனந்தன் கருடன்
முத்துக்குமரனலைமகள் பூமகள்
வித்தகர் ஞானியர் மறையோதும் வேதியர்
நித்தம் துதித்திடும் நித்திலத்தொத்தே
No comments:
Post a Comment