கமலவல்லி உடனிருக்கும்…….
பல்லவி
கமலவல்லி மனம் மகிழ உடனிருக்குழகிய
கமலநாபனைக் கேசவனைத்துதித்தேன்
அனுபல்லவி
சமமென தனக்கொருவரில்லாத அழகனை
அமரரும் அமரேந்திரனும் முனிவர்களும் பணிந்தேத்தும்
சரணம்
குன்றெனப் பரந்தத் தோள்களுடையவனை
வென்றரக்கர்கள் கதை முடித்த மாயவனை
அன்றொருநாள் குன்றேந்தி மழை தடுத்த மாதவனை
இன்று சங்கும் சக்கரமும் ஏந்தி நிற்கும் தேவனை
No comments:
Post a Comment