Sunday, 26 February 2023

எண்ணி மனமார………

रणन्मञ्जीराभ्यां ललितगमनाभ्यां सुकृतिनां

मनोवास्तव्याभ्यां मथिततिमिराभ्यां नखरुचा |
निधेयाभ्यां पत्या निजशिरसि कामाक्षि सततं
नमस्ते पादाभ्यां नलिनमृदुलाभ्यां गिरिसुते ‖96‖

#பாதாரவிந்த_சதகம்

#மூக_பஞ்சசதி 

96. ரணந் மஞ்ஜீராப்யாம் லலித கமநாப்யாம் ஸுக்ருதிநாம் 

மனோ வாஸ்தவ்யாப்யாம் மதி

ததி மிராப்ப்யாம் நக ருசா 

நிதேயாப்யாம் பத்யா நிஜ சிரஸி காமாக்ஷி  ஸததம் நமஸ்தே 

பாதாப்யாம் நலிந ம்ருதுலாப்யாம் கிரிஸுதே.

மலை மகளே ! காமாக்ஷி ! இனிமையாக ஒலிக்கின்ற சிலம்புகளுடன் கூடியதும் மென்மையுடன் நடமாடுவதும், புண்ணியம் செய்தவரின் உள்ளத்தில் குடியிருப்பதும், நக ஒளியாக உள்ளத்து இருட்டைப் போக்குவதும் கணவரால் தன் சிரசில் தாங்கத்தக்கதும், தாமரை போன்று மென்மை உள்ளதுமான உனது திருவடிக்கு நமஸ்காரம். 


                                                எண்ணி மனமார………


                                                            பல்லவி

                                           எண்ணி மனமார தினம் துதித்தேன் காமாக்ஷி

                                           தண்மதி பிறை சூடும் தாயேயெனக்கருள்வய்  

                                                           அனுபல்லவி

                                           அண்ணன் கேசவனின் மனம் மகிழச்செய்பவளே

                                           பெண்ணணங்கே பேரழகே சிவபெருமான் நாயகியே       

                                                               சரணம்                  

                                           புண்ணியம் செய்தோரின் உள்ளத்திலிருப்பதுவும்

                                           தண்டை கொலுசணிந்து மென்மையுடன் நடமாடும்

                                           உள்ளிருக்கும் இருளகற்றும் ஒளிமிகு நக க்கீற்றுமுள்ள

                                           உன் கணவர் தன் தலையால் தாங்கும் மலர்ப்பதத்தை


"கல்"லென ஒலிக்கும் தண்டை கொலுசுகள் தாங்கி நிற்கும்

மெல்லென அடியெடுத்து

புண்ணியர் மனத்தில் நிற்கும்

உள்ளிருள் அகற்றும் ஒளியாய் நகத்தின் நற்கீற்றிருக்கும்

உன்னவர் தலைக்கணியும் தாமரைத் தாள் பணிந்தேன்


                            

                                

No comments:

Post a Comment