வர்ணிக்க வார்த்தையில்லை……
பல்லவி
வார்ணிக்க வார்த்தையில்லை உனதழகைத் தாயே
தர்மாம்பிகையே அறம் வளர்த்த நாயகியே
அனுபல்லவி
பர்வதராஜ குமாரியே பார்வதியே
சர்வலோகநாயகியே கேசவன் சோதரியே
சரணம்
மர்மமானவளே மாமேருதனிலுறை
நிர்மலமான நித்யகல்யாணியே
கர்மவினைப் பயனால் கட்டுண்ட எனையே
வர்மம் வைத்திடாமல் காத்தருள்வாயே
No comments:
Post a Comment