நாமசங்கீர்த்தனம்……
பல்லவி
நாமசங்கீர்த்தனம் செய்தே நாமந்த
பூமண்டலம் போற்றும் விட்டலனை துதிப்போம்
அனுபல்லவி
பாமரரும் பண்டிதரும் யாவரும் கொண்டாடும்
கோமகனைக் கேசவனை ராமகிருஷ்ண ஹரியை
சரணம்
சாம முதல் வேதங்கள் சாத்திரங்கள் புகழும்
தாமரை நாபனை பாண்டுரங்க விட்டலனை
பூமகள் ருக்மணியின் மனங்கவர் நாயகனை
ஆமருவியப்பனாய் ஆநிரை மேய்த்தவனை
காமனைப்படைத்தவனைக் கலியுகவரதனை
காமக்ரோதாதி அறுபகை அறுப்பவனை
ஓமெனும் மந்திரத்தின் உட்பொருளானவனை
தாமோதரனை ஶ்ரீமன் நாராயணனை
விட்டல விட்டல பாண்டுரங்கா
விட்டல விட்டல பண்டரிநாதா
ராமகிருஷ்ண ஹரி ஜெய் பாண்டுரங்க ஹரி
கோவிந்த ஹரி ஶ்ரீ கோபால ஹரி
No comments:
Post a Comment