கண்ணனை…….
பல்லவி
கண்ணனைக் கேசவனை கண்ட கண்கள்
மண் மீது வேறெதையும் காண விழைவதில்லை
அனுபல்லவி
தண் மதிமுகத்தோனை தாமரை நாபனை
விண்ணோரும் மண்ணோரும் கண்டு வியக்கும்
சரணம்
வண்ணமேக நிறம் கொண்ட மாயவனை
வெண்ணையுண்ட வாயனை என்னுள்ளம் கவர்ந்தவனை
அண்டங்களினரசனை அணியரங்க அமுதனை
கண்ட என் கண்கள் காண இனி வேறில்லை
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்* என்உள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
கண்ட கண்கள்* மற்றுஒன்றினைக்* காணாவே.
திருப்பாணாழ்வார்திருவடிகளேசரணம்
ஶ்ரீநம்பெருமாள்திருவடிகளேசரணம்🙏🙏🙏
No comments:
Post a Comment