ஓரவஞ்சனை……
பல்லவி
ஓரவஞ்சனை ஏனய்யா என் மீது
ஆரமுதே ராகவனே அயோத்தி மன்னனே
அனுபல்லவி
ஈரமில்லாத நெஞ்சமோ உன் நெஞ்சம்
பாரபட்சம் காட்டி நீயும் பாராதிருப்பதேனோ
சரணம்
தீர விசாரணை ஏதும் செய்யாமலே
ஊரிலோர் வண்ணான் சொன்ன சொல் கேட்டு
கார்குழலாள் ஜானகியை கானகம் அனுப்பிய
வீரனல்லவோ நீ கேசவனே ரகுராமா
No comments:
Post a Comment