சிதம்பரம்……
பல்லவி
சிதம்பரம் சென்றவனை தரிசிப்பவர்க்கு
இதம் தருவான் பல நன்மைகள் புரிவான்
அனுபல்லி
கதம்பவனத்தமர் சிவகாமியுடனே
நிதம் நடம் புரிந்திடும் நடராஜன் நின்றருளும்
சரணம்
விதம் விதமான லீலைகள் புரிபவன்
பதஞ்சலி வியக்ரபாதரும் கேசவனும்
பதம் பணிந்து போற்றும் பொன்னம்பலவாணன்
சதமவன் பதமென உளமாரத் துதித்து
No comments:
Post a Comment