இரும்பனன் றுண்ட நீரும்
போதருங் கொள்க, என்றன்
அரும்பிணி பாவ மெல்லாம்
அகன்றன என்னை விட்டு
சுரும்பமர் சோலை சூழ்ந்த
அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டென்
கண்ணினை களிக்கு மாறே
-திருக்குறுந்தாண்டகம் 13.
எந்நேரமும் வண்டுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அழகிய
சோலைகள் சூழ்ந்த அரங்கத்தில் பள்ளிகொண்ட கரும்பாகிய என்
அரங்கனைக் கண்ட மாத்திரத்தில், சூடான இரும்பில் பட்ட நீர் எவ்வாறு
வேகமாக உட்கவரப்பட்டு காணாமல் போகிறதோ அதுபோல், என்
பாவமெல்லாம் என்னைவிட்டு பறந்தோடிவிட்டது என்று
திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசித்து மங்களாசாசனம் செய்யப்பட்ட
இத்தலம் இன்றைய இந்தியாவிலேயே மிகச் சிறப்பான தலமாகும்.
திருவரங்கனை…..
பல்லவி
திருவரங்கனைக் கண்டு துதித்தேன்
சுரும்பமர் சோலைசூழ் அரங்கமா நகரிலுறை
அனுபல்லவி
திருவரங்க நாயகி உடனுறைக் கேசவனை
அருளமுதை ஆராவமுதனை
சரணம்
இரும்புனில் பட்ட நீர் ஆவியாவதுபோல
இருவினையனைத்தும் அகன்றதெனை விட்டு
கரும்புச் சோலை சூழ் அரங்கநகர் கோயிலுள்
கரும்பென எழுந்தருளிக் காட்சி தரும்
No comments:
Post a Comment