புதுப்பொலிவுடன் …..,,
பல்லவி
புதுப்பொலிவுடன் திகழும் யதுகிரித்தாயாரை
கதியவள் பதமென வணங்கித் துதித்தேன்
அனுபல்லவி
குதுகலத்துடனே செலுவநாராயணனின்
மதுரமான மணிமார்பிலும் விளங்கும்
சரணம்
யதுகுலத்திலகன் கேசவன் மனங்கவர்
பதுமை ருக்மணி தேவியைத் திருமகளை
வித விதமான அவதாரமெடுத்த
பதுமநாபனுடன் அவதரித்தவளை
No comments:
Post a Comment