பாலித்தருள்வாயே…….
பல்லவி பாலித்தருள்வாயே ஶ்ரீ பத்மநாபா |
ஞாலமுண்ட வாயனே அனந்தசயனனே
அனுபல்லவி
ஆலிலையில் துயின்ற மாதவனே கேசவனே
காளிங்கன் தலைமீது நடம் புரிந்த கண்ணனே
சரணம்
பாலகோபாலனே அமரருக்கமுதளித்த
நீலமேகவண்ணனே கரன் முரனை வதைத்தவனே
கோலமுடன் பூதேவி ஶ்ரீதேவி உடனிருக்கும்
மாலவனே மதுசூதனனே மாயனே
குன்றைக் குடையாக்கி குவலயம் காத்தவனே
அன்றிவ்வுலகளந்த அழகிய வாமனனே
வென்று பல அரக்கர்களின் கதை முடித்த பாலனே
இன்று அனந்தபுரம் பதிதன்னிலுறைபவனே
No comments:
Post a Comment